கிரகணம் ஏற்படும்போது கடவுளுக்கே பவர் இல்லாமல் போய்விடும், கெட்ட சக்திகள் தலைதூக்கும் என்று பல படங்கள் வந்துள்ளன. கிரகணம் மனிதர்கள் வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்துமா என்ற கருவுடன் உருவாகிறது புதிய படம் ‘கிரகணம்’. இதுபற்றி இயக்குனர் இளன் கூறியது: சந்திரகிரகணம் நிகழும் ஒருநாள் இரவில் கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த பாதிப்பு அவர்களின் வாழ்வில் என்னென்ன திருப்பங்களை ஏற்படுத்துகிறது என்பது திகிலாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணா, சந்திரன் ஹீரோக்கள். புதுமுகம் நந்தினி ஹீரோயின். கருணாஸ், கருணாகரன், ஜெயபிரகாஷ், பாண்டி, சிங்கப்பூர் தீபன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
சரவணன், கார்த்திக் தயாரிப்பு. சிவகுமார் இணை தயாரிப்பு. கே.எஸ்.சுந்திரமூர்த்தி இசை. ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு. இப்படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்தது. தினமும் இரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணிவரை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 2 ஹீரோக்கள் இருந்தாலும் ஒருவரையொருவர் சந்திக்கும் காட்சி கிடையாது. ஒரு மாதத்துக்கு மேல் இரவு ஷூட்டிங் நடந்தபோதும் ஹீரோயின் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
