பெட் ரூம் காட்சிகள் எடுக்கும் முன்பு - என்ன செய்வார்கள் தெரியுமா -சகீலா ..!

 

90-களில் 'பாலான' படங்கள்னாலே அது நம்ம சகீலா சேச்சி தான். அந்தப் பக்கம் மலையாளத்துல ஆரம்பிச்சு இந்தப் பக்கம் தமிழ் வரைக்கும் ஒரு காலத்துல கொடி கட்டிப் பறந்தவங்க. டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு சகீலா இல்லாம அப்போல்லாம் படமே வராது. ஆனா, அந்தப் படங்களுக்குப் பின்னாடி அவங்க அனுபவிச்ச சித்திரவதைகளை இப்போ ஒரு மலையாள சேனல் பேட்டியில சொல்லி வருத்தப்பட்டு இருக்காங்க.

"பெட்ரூம் சீன்ஸ் எடுக்கும்போது டைரக்டர்கள் எங்களை வச்சு செய்வாங்க"ன்னு ஓப்பனா உடைச்சிருக்காங்க சகீலா. முதல்ல மேல தண்ணிய தெளிச்சு, டிரெஸ்ஸை நனைய வைப்பாங்களாம். அதுலயும் டிரஸ்ஸை அவங்களே டிசைன் பண்ணி, மார்புப் பகுதி வெளியே தெரியுற மாதிரி வெள்ளை டிரெஸ்ஸை போடச் சொல்லி கட்டாயப்படுத்துவாங்களாம். பாக்குறதுக்கு வேணா அது கிளாமரா தெரியலாம், ஆனா அங்க நாங்க பட்ட பாடு இருக்கே, அது ரொம்பக் கொடுமைன்னு சொல்லிருக்காங்க.

இதுல கொடுமை என்னன்னா, சில சபலம் புடிச்ச வில்லன் நடிகர்களும், டைரக்டர்களும் சேர்ந்துக்கிட்டு பண்ற அலும்புதான். தேவையில்லாம கிஸ்ஸிங் சீன், ரேப் சீன் எடுக்கும்போது வேணுமுன்னே 'ரீ-டேக்' மேல 'ரீ-டேக்' வாங்கி எங்களை இம்சை பண்ணுவாங்க. இதெல்லாம் தாண்டி, என்னைப் பார்த்தாலே 'ஐட்டம் ஆக்ட்ரஸ்'ன்னு கேவலமா பேசுறத நானே காதுபடக் கேட்டு ரொம்ப உடைஞ்சு போயிருக்கேன்"ன்னு சகீலா ஃபீல் பண்ணிருக்காங்க.

தமிழ், மலையாளம், தெலுங்குன்னு எந்த சினிமாவுக்குப் போனாலும் இந்தத் தொல்லை இருந்துகிட்டேதான் இருக்குன்னு சொன்ன சகீலா, இப்போ கூட நான் செத்துட்டதா சில பேர் சோசியல் மீடியாவுல வதந்திய கிளப்பி விட்டு வேடிக்கை பாக்குறாங்கன்னு ஆதங்கப்பட்டார். என்னதான் இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், சேச்சி இப்போ வரைக்கும் சினிமாவிலும் சரி, மலையாள சின்னத்திரையிலும் சரி ரொம்ப பிஸியாவே வலம் வந்துட்டு இருக்காங்க.

Previous Post Next Post

Contact Form