சங்கிலி புங்கிலி கதவ தொற படம் வரும் 19-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு சென்சார் குழுவினர் U/A சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதிகா, ராதாரவி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஐகே இயக்கியுள்ளார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஹாரர் படமாக உருவாகியுள்ளது.
அட்லியும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கிறது. மாயா படத்தின் மூலம் பிரபலமான சத்ரியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.
Tags:
cinema news
