நட்டிக்கு பொருத்தமான கதைக்களம் இந்த "போங்கு"


ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும்  இணைத்து தயாரிக்கும் படம் "போங்கு" சதுரங்க வேட்டை வெற்றி படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன் (நட்டி) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர் ஹிந்தியில் இரண்டு படங்களிலும் மற்றும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த "காலண்டர் கேர்ள்ஸ்" என்ற படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சாலைகளில் அதுவும் நேஷ்னல் ஹைவேஸ் ரோடுகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ அது மாதிரி திரைக்கதை பர பரன்னு பறக்கும்...
நட்டிக்குன்னு தைத்து வெச்ச சட்டை மாதிரி காரக்டர் அப்படியே பொருந்தி போய் விட்டது.

சரியாக சொல்லப்வ்போனால் சதுரங்க வேட்டையை தாண்டுவது போல இந்த கதாபாத்திரத்தில் அவர் ஜொலிப்பார். படம் விரைவில் வெளியாக உள்ளது.

நல்ல படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள்..அந்த ஆதரவு போங்கு படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார் இயக்குனர் தாஜ்.
Previous Post Next Post

Contact Form