தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் நாகச் சைதன்யா, தமன்னா நடிப்பில் வெளியான ’100% லவ்’ இந்த படம் தெலுங்கில் அதிக வசூலை குவித்தது.இந்த படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமாகிய இளம் ஹீரோ நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஃப்ரெட் மர்பியிடம் பணியாற்றிய சந்திரமௌலி இயக்குவார் என கோலிட் வட்டாரத்தில் பரப்பாக பேசப்பட்டது.
படத்தின் நாயகியாக தமன்னா நடிக்க தயாரிப்பாளர் அணுகிய போது நான் யார் தெரியுமா? தற்போது என்னுடைய ரேஞ்ச் என்ன தெரியுமா? 1000 கோடி வசூல் செய்த படத்தின் நாயகி நான், உங்கள் ஹீரோ நடித்த 3 படங்களும் தொடர்ந்து ஊத்திக்கிச்சி, பெண்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை அந்த பொடியன் கூட என்னால் நடிக்க முடியாது என கூறி தயாரிப்பாளரை திரும்ப அனுப்பியதாகவும்,
படக்குழு பாகுபலி படத்தில் வாங்கிய சம்பளத்தை தருவதாக அவரிடம் சமசரம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவலாக பேசப்படுகிறது எல்லாம் தமன்னாவிற்கு தான் வெளிச்சம்.
