அன்னையர் தினமான மே 14ல் அம்மாவின் கோயிலை ராகவா லாரன்ஸ் திறக்கின்றார்


அம்பத்தூரில் ராகவேந்தர் கோயில் அருகே தனது தாயார் கண்மணிக்கு லாரன்ஸ் கட்டிக் கொண்டிருக்கும் கோயிலை அன்னையர் தினமான மே 14 ம் தேதி அன்று காலை 8 மணிக்கு ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் அவர்கள் திறந்து வைக்கிறார். ஆரம்ப காலத்தில் லாரன்ஸ் கஷ்டப்பட்ட போது ஆதரவு கரம் நீட்டியவர் சூப்பர் சுப்பராயன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் வயது மூத்த ஆயிரம் தாய்மார்களுக்கு சேலையும் , ஆறு விவசாய பெண்களுக்கு தாலியை மீட்டு தரும் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.

இந்த விழாவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரும் போது பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சினிமா மற்றும் முக்கிய பிரமுகர்களை மே 14 ம் தேதியிலிருந்து ஒரு மண்டலம் ,அதாவது 48 நாள் முடிந்த மறு நாள் அழைக்கப் பட உள்ளனர்..அன்று கலையுலத்தை சேர்ந்தவரகள் உட்படபல துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள். அன்னையர் தினத்தன்று அன்னைக்கு கோயில் திறந்து உலகில் உள்ள எல்லாஅன்னையருக்கும் சமர்ப்பிக்க உள்ளார் லாரன்ஸ்.

அன்னை ஒர் ஆலயம்...
அன்னைக்கு ஒர் ஆலயம்...
Previous Post Next Post

Contact Form