ஆண்டுகள் பல கடந்தும் தனது கடுமையான உடல் பயிற்சி மற்றும் நல்லொழுக்கம் மூலம் இளமை குன்றாத தோற்றம் கொண்ட Action King அர்ஜுன் passion ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்தின் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், மற்றும் அருண் வைத்ய நாதன் தயாரிக்கும் ' நிபுணன்' படம் முலமாக தந்து 150 ஆவது படத்தை பூர்த்தி செய்கிறார்.
'அர்ஜுனின் 150ஆவது படத்தை தயாரித்து இயக்குவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 150 படங்களையும் கடந்த அவரது உன்னத உழைப்புக்கும், சற்றும் குறையாத அவரது உற்சாகத்துக்கும் ஈடு இணை இல்லை என்று தான் சொல்லுவேன். அவர்து சாதனையை கொண்டாடும் விதமாக 'நிபுணன்' படக் குழுவினர் இந்தப் படத்தின் டீசரை 150 திரை உலக பிரபலங்கள் மூலமாக ட்வீட் செய்து வெளியிட்டிருக்கிறோம். இது சாத்தியமா, அவ்வாறு ட்வீட் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்ற ஐயத்தோடு தான் இருந்தோம். ஆனால் கூறியதைபோல அனைவரும் தவறாமல் நிபுணன் படத்தின் டீசரை ட்வீட் செய்து #Arjun150 என்ற சொல்லை இந்தியா முழுவதும் டிரெண்டிங்கில் வரச் செய்துவிட்டார்கள். அர்ஜுன் சார் மேல் திரை உலக கலைஞர்கள் வைத்து இருக்கும் மரியாதை என்னவென்று நாங்கள் அறிந்துக் கொண்ட தருணம் இது.
சில நாட்களுக்கு முன்னர், அர்ஜுன் சார் உட்பட எங்கள் படக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற சென்றோம். அப்போது அவர் 'நிபுணன்' படத்தின் டீசரை பார்த்தார். மிக மிக உற்சாகமாகி எங்களை பாராட்டினார். 'This is sure shot winner' என்று அவருக்கே உரிய பாணியில் பாராட்டியதோடு, படம் வெளிவந்ததும் நிச்சயம் நான் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்தார். அர்ஜுன் சாருக்கும், ரஜினி சாருக்கும் இருந்த பரஸ்பர அன்பையும் மரியாதையையும் கண்டு நாங்கள் வியந்துப் போனோம் என்று படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் கூறினார்.
Tags:
cinema news
