பைரவா திரைவிமர்சனம் - Bairavaa Movie Review

Posted Date : 12-Jan-2017

காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கல்வி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் நடத்தும் அக்கப்போறைதான் இந்த படத்திலும் கூறியிருக்கிறார் பரதன். ஒரு கருத்தை சொல்லவிரும்பும் ஒருவர் தனியாக நின்று கொண்டு கூவினால் நாய் கூட மதிக்காது என்பதால் இளையதளபதியை வைத்துக் கொண்டு திரையில் நமக்கு பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர்.

சென்னையில் தனியார் வங்கியில் லோன் கலெக்‌ஷன் டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறார். வங்கியில் லோன் வாங்கிட்டு டிமிக்கி கொடுப்பவர்களை நொங்கெடுத்து பணத்தை வாங்கும் வேலை. இதற்கிடையில் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வரும் கீர்த்தி சுரேஷ் மீது காதல் வயப்படுகிறார் விஜய். அவரிடம் காதல் சொல்ல போகும்போது கீர்த்தி சுரேஷின் நண்பனை ரவுடிகள் கத்தியால் வெட்டி கீர்த்தி சுரேஷை கிளம்புமாறு அந்த ரவுடிகள் கூறுகிறார்கள். 

அதன்பின் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்னொரு கும்பல் வெட்ட வருகிறது. அவர்களும் கீர்த்தி சுரேஷை எதுவும் செய்யாமல் ஓடிவிடுகிறார்கள். இதனையெல்லாம் பார்க்கும் விஜய்க்கு ஒன்றும் புரியாமல் குழம்புகிறார். தன்னை தெளிவுபடுத்திக் கொள்ள கீர்த்தி சுரேஷிடம் என்ன நடக்கிறது. யார் அந்த ரவுடிகள் என்று கேட்க, பிளாஷ்பேக் ஓபன் ஆகிறது.

திருநெல்வேலியில் ஜெகபதிபாபு பெரிய தொழிலதிபாராக இருக்க அவர் பெயரில் ஒரு மருத்துவ கல்லூரி இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த கல்லூரியில்தான் கீர்த்தி சுரேஷ் படித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரியின் தரம் மட்டமாக இருப்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துவிடுகிறார்கள் மாணவர்கள் சிலர். அதன்பின் மத்திய அரசு குழு அந்த கல்லூரியில் இன்ஸ்பெக்‌ஷன் நடத்தி கல்லூரி உரிமையை ரத்து செய்ய முடிவெடுக்கிறது. இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழிக்கும் ஜெகபதிபாபு செய்யும் பல தவறுகளால் ஒரு மாணவியின் உயிர் பறிக்கப்படுகிறது. இதனை கண்டு அஞ்சாமல் ஜெகபதிபாபு மீது போலீஸில் புகார் கொடுக்கிறார்.

டேனியல் பாலாஜிதான் ஜெகபதிபாபுவுக்கு அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கிறார். வழக்கு முடியும்வரை கீர்த்தி சுரேஷுக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கோர்ட் உத்தரவிடுகிறது. ஆதாரங்களை சேகரிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி. இதையெல்லாம் விஜய்யின் கூறியதும் கீர்த்திக்கு உதவ அவரும் திருநெல்வேலிக்கு வருகிறார். ஜெகபதிபாபுவுக்கு எதிராக அவர் சேகரிக்கும் ஆதாரங்கள்தான் படத்தின் இரண்டாம் பாதி.

ஆக்‌ஷன், காமெடி, காதல் என அனைத்தையும் வரிசையாக சரிவர பரிமாறியிருக்கிறார் இயக்குனர். இசை சந்தோஷ் நாராயணன் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்தான். ஆனால் வர்லாம் வர்லாம் வா பைரவா பாடல் மட்டும்தான் அடங்கி கிடக்கும் நரம்புகளை டக்கென புடைக்க செய்கிறது. பின்னணி இசை நன்று.

ஒளிப்பதிவு சுகுமார் - மைனா, கும்கி, தர்மதுரை என வித்தியாசமான படங்களில் தன் திறமையை நிரூபித்தவர் பைரவா படத்திலும் அதை திறன்பட செய்து காட்டியிருக்கிறார்.

இயக்கம் பரதன் 10 வருஷத்துக்கு முன்னாடி அழகிய தமிழ்மகன் என்ற படத்திலும் விஜய்தான் அறிமுகபடுத்தினார். படம் சரியாக ஓடவில்லை என்றாலும் பரதனுக்கு திறமை இருக்கு மீண்டும் வாய்ப்பு தரலாம் என இப்போது அந்த வாய்ப்பை கொடுத்திருந்தார். அதை சிறப்பாக செய்திருக்கிறார் பரதன். விஜய்யை எப்படி காட்டினால் ரசிகர்கள் மற்றும் மக்கள் ரசிப்பார்களோ அதை மட்டும் செய்திருக்கிறார். வாழ்த்துகள் பரதன்.

-ஸ்ரீனி...

Tamil News Update

Find us on Facebook