பிரச்சனை பண்ண நான் தயார் - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்புவின் போராட்டம்

Posted Date : 11-Jan-2017

பொங்கல் பண்டிகை என்றாலே நமக்கெல்லாம் முதலில் ஞாபகம் வருவது என்னவோ ஜல்லிக்கட்டு தான். ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அமெரிக்க நிறுவனம் PETA என்ற அமைப்பு இந்தியாவில் புகுந்து ஜல்லிக்கட்டு மீது வழக்கு தொடர்ந்து தடையையும் வாங்கிட்டு அமெரிக்காவுக்கு கிளம்பிட்டாங்க. 

2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் ஜல்லிக்கட்டு நடத்திய ஆதாரங்கள் இருக்கிறது நம்மிடம், ஆனால் அதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு தடை என்று அறிவித்துவிட்டது உச்சநீதிமன்றம். இதை தமிழகம் மற்றும் மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததுதான் வருந்ததக்கதாக இருந்தது. ஆனால் இந்த வருடம் 2017ம் ஆண்டு பொங்கலுக்கு எப்படியும் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்திட வேண்டுமென ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களே ஆங்காங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டுக்கு திரை நட்சத்திரமான சிம்பு தான் முதல் குரல் கொடுத்தார்.

இன்று மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர் பேரணியில் போலீசார் கடுமையாக லட்டி சார்ஜ் நடத்தியிருக்கிறார்கள் என்ற தகவல் சிம்புவுக்கு தெரிய வந்ததும் உடனே மீடியாவை சந்தித்துவிட்டார் சிம்பு.

இந்த சந்திப்பில் சிம்பு பேசியதாவது, என்னுடைய அவசர அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி. இப்ப தமிழ்நாட்டில் என்ன பிரச்சனை நடந்துட்டு இருக்குன்னு எல்லோருக்கும் தெரியும். முதலில் நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழனுக்கு காலம் காலமாக பிரச்சனை வந்துட்டே இருக்கு, இந்த பக்கம் தண்ணி தரமாட்றாங்க, அந்த பக்கம் நம் தமிழர்களை கொன்று குவிக்கிறாங்க... இப்படி எல்லாதையும் பொறுத்து பொறுத்து போயிட்டிருந்த நாம இப்ப இந்த ஜல்லிக்கட்டு தடை என்கிற விஷயத்துக்கு ஒன்று இணைவோம். நம் வீட்டிற்குள் புகுந்து நீ இதை செய்யக்கூடாது, அதை செய்யக்கூடாது சொல்ல அவனுங்க யாரு... நான் எதை செஞ்சாலும் பிரச்சனை பண்ண் ஒரு கூட்டம் இருக்கு, இப்ப நான் பிரச்சனை பண்ணதான் வந்திருக்கேன். எவன் வர்றான்னு நான் பாக்குறேன்...

நம் தமிழர்களை தனி தனியாக பிரித்துவிட்டார்கள். எந்த ஒரு விஷயத்துக்கும் எல்லோரும் ஒன்றாக இணைந்து போராட விரும்பவில்லை. நீ அங்க போராட்டம் நடத்து நாங்க இந்த பக்கம் போய் போராட்டம் நடத்துறேன்னுதான் கிளம்புறாங்க. இதை முதலில் ஒழிக்கனும். எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் நம் எதிர்ப்பை தெரிவித்தால் அதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். இதனால் நான் நாளை மாலை 5 மணிக்கு என் வீட்டின் முன்னே ஒரு 10 நிமிடம் கருப்பு சட்டை அணிந்து என்னுடைய எதிர்ப்பை காட்டவிருக்கிறேன். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் அனைவரும் ஒரு 10 நிமிடம் ஒதுக்கி சரியாக 5 மணிக்கு நம் எதிர்ப்பை காட்டுவோம் என்றார் சிம்பு.

மேலும் சினிமா பிரபலங்கள் சிலர் ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். அவர்களையும் விளாசிவிட்டார் யங் சூப்பர் ஸ்டார் சிம்பு...

Tamil News Update

Find us on Facebook