குடி பழக்கத்திற்கு அடிமையான நடிகை

Posted Date : 10-Jan-2017

15 வயதிலேயே தமிழ் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர் அந்த ‘மங்களகரமான’ நடிகை. சிறு வயதிலேயே நடிப்புத் தொழிலுக்கு வந்துவிட்டதாலோ என்னவோ திரையுலகின் அத்தனை நெளிவு சுளிவுகளையும் அத்தனை சீக்கிரத்தில் கற்றுத் தேர்ந்தார். போதாக்குறைக்கு நடிகையின் முதல் படம் உட்பட ஒப்பந்தமான அடுத்தடுத்த இரண்டு படங்களும் தொடர்ந்து ஹிட்டடித்தது. விளைவு எதற்கெடுத்தாலும் செண்டிமெண்ட் பார்க்கும் திரையுலகம் நடிகையை குட் செண்டிமெண்டாக பாவித்து உச்சத்துக்கு கொண்டு சென்றது.

நடிகையின் சம்பளம் எகிறியது. ஹீரோக்கள் மொய்க்கத் தொடங்கினார்கள். இதனால் பெற்றோரின் கட்டுக்காவல்களை மீறத் தொடங்கினார் நடிகை. 16 வயதிலேயே தனது சித்தப்பா வயதையொத்த நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து அவரது படங்களில் நடித்தார். 17 வயதில் இன்னொரு ஹீரோவுடன் இரண்டாவது காதலில் விழுந்தார். அவருடன் சில படங்களில் லிப் கிஸ் அடிக்கும் அளவுக்கு நெருங்கி நடித்தார். நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருக்கும் அந்த ஹீரோ, இந்த நடிகையைத்தான் திருமணம் செய்வார் என மீடியாக்கள் கட்டியம் கட்டியது. ஆனால் ஹீரோவுக்கோ, இந்தப் பழம் புளிக்க ஆளை மாற்றினார். 

இதெல்லாம் சினிமாவில் சகஜம்தான் என்றாலும் நடிகையின் சில சகவாசங்கள்தான் இன்று அவரது கேரியரையே ஆட்டம் காண செய்திருக்கிறது. ஆரம்பத்தில் பார்ட்டிகளில் தனது தோழிகள் மூலம் லேசாக அறிமுகமான குடிப்பழக்கம் வெகு சீக்கிரமே அவரை ஆட்கொள்ளத்தொடங்கியது. ஆரம்பத்தில் பார்ட்டிக்கோ, அவுட்டோர் ஷூட்டிங்கோ போனால் மட்டுமே குடிப்பது என்று இருந்தவர், நாளடைவில் தினந்தோறும் என்றாகி தற்போது கேப் கிடைக்கும்போதெல்லாம் குடிப்பது என்றாகிவிட்டார். ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்தால் கிடைக்கும் போதை பற்றாமல்போகவே போதையின் அடுத்தகட்டத்திற்குப் போனார். 

நடிகை இப்போது எந்த அளவுக்கு போதைப் பழக்கத்திற்கு அடிமை என்றால் தான் எதிர்பார்க்கும் நேரத்தில் போதை கிடைக்காவிட்டால் உச்சகட்டமாக கெஞ்சவும் உச்சகட்டமாக மிஞ்சவும் செய்யும் அளவுக்கு போதைக்கு அடிமையானார். போதாகுறைக்கு நடிகையின் உடல் எடை கூடியது. குறிப்பாக நடிகையின் மிகப்பெரிய பலமான முக அழகு கெட்டுப்போனது. விளைவு படங்களில் விகாரமாக தெரிய ஆரம்பித்தார். ரசிகர்கள் இணையத்தில் கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்து இயக்குநர்கள், நம் நடிகையின் பெயரைச் சொன்னாலே தெறித்து ஓடிவிடும் அளவுக்கு நிலைமை ஆனது. நல்ல நல்ல வாய்ப்புகளை இழந்தார். வெகுகாலம் நடிகை வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னால் வந்த நடிகைகள் எல்லாம் முன்னேறி போக ஆரம்பித்தார்கள். 

இந்த இடைபட்ட காலகட்டத்தில் தனது தவறுகளை உணர்ந்த நடிகை தற்போது தனது கெட்ட பழக்கவழக்கங்களை வெகுவாக குறைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். முதற்கட்டமாக தனது உடல் எடையை வெகுவாக குறைத்த நடிகை, தற்போது தனது முகத்தில் இருக்கும் சதையை குறைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். இதைத் தொடர்ந்து தற்போது ஒரு முன்னணி ஹீரோவுடன் ஜோடி போடும் வாய்ப்பு நடிகைக்கு வந்திருக்கிறது. இம்முறை பொறுப்பாக இருந்து கரையேறிவிடுவது என சபதம் ஏற்றிருக்கிறார் நடிகை.

Tamil News Update

Find us on Facebook