மோ திரைவிமர்சனம் - Mo Movie Review

Posted Date : 30-Dec-2016

பேயை காட்டுல பார்த்திருப்ப, வீட்ல பார்த்திருப்ப, ஏன் தெரு முனையில கூட பார்த்திருப்ப... ஸ்கூல்ல பார்த்திருக்கியா? வெறித்தனமா சிரிக்க வச்சு பார்த்திருக்கியா?. எந்தவித எதிர்பார்ப்புமின்றிதான் இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. ஆனால் படம் பார்த்தபின் கிடைத்த ரிசல்ட் இருக்கே அதை எங்கபோய் சொல்லுவேன்... எப்படி சொல்லுவேன்... சரி வாங்க விமர்சனத்துக்குள்ள போவோம்ம்ம்ம்ம்....

சந்தோஷமாவும், நிம்மதியாவும் வாழ்ந்துட்டு இருக்குற ஒரு அப்பார்ட்மெண்ட்ஸ் மக்களை ஆவி, ஆத்மா இருக்குன்னு நம்ம வச்சு அவர்களை ஏமாற்றி பேய் ஓட்டும் டுபாக்கூர் வேலையை செய்கிறார்கள் சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா, ராமதாஸ் (முனிஷ்காந்த் என்றே பயன்படுத்திக் கொள்கிறேன் விமர்சனத்தில்), ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி இவர்கள் ஆவி ஓட்டும் ஒரு அப்பார்ட்மெட்ண்ட்ஸில் செக்ரட்டரியாக இருப்பவர்தான் செல்வா. இவரை நம்ம வைத்து பல லட்சங்களை ஆட்டைய போடும் இந்த கும்பல் மீண்டும் இவரிடமே வசமாக சிக்கிக் கொள்கிறது.

என்னைய ஏமாத்துனதுக்கு எனக்கு ஒரு ஹெல்ப் பன்னிட்டு போயிட்டே இருங்கன்னு ஒரு கண்டிஷன் போடுகிறார். அதாவது இவரின் தொழில்முறை போட்டியாளரான மைம் கோபி பாண்டிச்சேரியில் ஒரு பழைய பள்ளி கட்டிடத்தை வாங்க முயற்சி செய்கிறார். அதை தடுத்து நிறுத்த அந்த பள்ளியில் பேய் இருக்குன்னு மைம் கோபியை நம்ப வைக்கனும் என்று சுரேஷ் ரவி குரூப்புக்கு கட்டளையிடுகிறார் செல்வா.

போலீஸ்கிட்ட மாட்டாம இருக்கனுமே வேற வழியில்லாம செல்வா சொன்னதை செய்ய பாண்டிச்சேரி கிளம்புகிறார்கள். அந்த பாழடைந்த பள்ளியில் சென்று எப்படியெல்லாம் மிரட்டலாம் என்று திட்டம் போடுகிறார்கள். அவர்கள் நினைத்த மாதிரியே மைம் கோபி மற்றும் அவரது குரூப்பை பயத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்று அவரை அந்த இடத்திலிருந்து தலை தெறிக்க ஓட வைக்கிறார்கள்.

வெற்றிகரமாக கொடுத்த வேலையை முடித்துவிட்டதாக செல்வாவுக்கு போன் போட்டு கூறுகிறார்கள். அவரும் அதை நம்பி அந்த பள்ளிக்கு வருகிறார். ஆனால் வந்தபிறகுதான் தெரிகிறது. அந்த பள்ளியில் நிஜமாகவே பேய் இருக்குன்னு அதுவும் கணக்கு பாடம் எடுக்குற ஒரு டீச்சர் பேய். அதன்பின் அந்த பள்ளியில் இருந்த பேய் இவர்களை என்ன செய்தது? அந்த பள்ளியை செல்வா வாங்கினாரா இல்லையா? என்பதுதான் க்ளைமேக்ஸ்.

சுரேஷ் ரவி சன் மியூசிக்கில் ஆங்கராக கலக்கிக் கொண்டிருந்தார் தற்போது வெள்ளித்திரையிலும் எண்ட்ரி கொடுத்து கதைக்கு முக்கியத்துவமான பேய் படத்தில் நடித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆக்‌ஷன், ரொமான்ஸ் செய்யக்கூடிய அத்தனை அம்சமும் முகத்தில் தாண்டவம் ஆடுது... வாழ்த்துகள் பிரதர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகை என்பது அனைவருக்கு தெரியும், ஆனால் பேய் படம் என்பதால் பேய் வேஷம் போட்டு ஓவர் ஆக்டிங் செய்தால் ஈசியாக ரசிகர்களை கவர்ந்துவிடலாம் என்று நினைத்திருப்பார் போல ஒரே வருஷத்துல ரெண்டு பேய் படம்... ஹிஹிஹி... ஆனால் பூஜா தேவரியாவை ஏன் ஒரே ஒரு காட்சியில் அதுவும் அவர் யாருன்னே தெரியாத பேய் வேஷத்துல பயன்படுத்துனீங்க இயக்குனரே...

ராமதாஸ் (முனிஷ்காந்த்) முண்டாசுப்பட்டி படத்துக்கு பிறகு சோலோ பர்ஃபாமென்ஸ் செய்ய நல்ல படமாக அமைந்திருக்கிறது இவருக்கு. ஆனால் சில இடங்களில் நம்மை வலுக்கட்டாயமாக கட்டிப்போட்டு கிச்சு கிச்சு மூட்ட முயற்சி செய்கிறார் இவர். உங்க ரைமிங் கரெக்ட்டா இருக்கு பாஸு... ஆனால் டைமிங்தான் சரியா இல்ல. இருந்தாலும் பேய் வேஷம்போட்டு நீங்க செய்யும் அலப்பறை இருக்கே... பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு...

யோகி பாபுவுக்கு ரசிகர் மன்றம் வைக்கிற அளவுக்கு அவரின் காமெடிகள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிக் கொண்டிருக்கும் இந்த காலத்துல அவரை ஒரே ஒரு காட்சியில் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது. 

படத்துல பாட்டு இல்லைன்னாலும் பின்னணியில் ஆங்காங்கே நம் காதுகளை பதம் பார்த்துவிடுகிறார் இசையமைப்பாளர் சமீர். ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம் என்றுதான் கூற வேண்டும் வாழ்த்துகள் விஷ்ணு ஸ்ரீ.

பொதுவாக ஒரு இயக்குனர் வெற்றி படம் தரனும்னா அது பேய் படமா இருக்கனும்னு சொல்லுவாங்க... அதேமாதிரி இப்படத்தின் இயக்குனர் புவர் ஆர்.நுல்லான் பேய் படத்தை செலக்ட் செய்து அதை வித்தியாசமான திரைக்கதையில் நம்மை சிரிக்க வச்சு பாராட்டுகளை வாங்கிவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

மொத்தத்தில் இந்த “மோ” - அப்படி இருக்கு(மோ) இப்படி இருக்கு(மோ) என்று பயந்து பார்க்க வேண்டாம். 2 மணி நேரம் சிரிச்சு என்ஜாய் பன்னிட்டு வர்லாம்.

-ஸ்ரீனி...

Tamil News Update

Find us on Facebook