துருவங்கள் பதினாறு விமர்சனம் - Dhuruvangal Pathinaru Movie Review

Posted Date : 29-Dec-2016

தமிழ் சினிமாவில் எத்ததனையோ க்ரைம் த்ரில்லர் படங்களை பழகிய தமிழ் சினிமா ரசிகனுக்கு இந்த துருவங்கள் பதினாறு படம் ஒரு நல்ல விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முதல் காட்சியிலேயே ஒரு கொலை நடக்கிறது. மேலும் அதே ஏரியாவில் ஒரு விபத்தும் நடக்கிறது. கொலையை தற்கொலையாகவும், விபத்தை கொலையாகவும் கருதி போலீஸ் அடுத்தகட்ட விசாரணையை தொடங்குகிறது. விசாரணை செய்யும் போலீசாக ரகுமான் நடத்திருக்கிறார். க்ரைம் த்ரில்லர் படம் என்பதால் படத்தின் திரைக்கதையும், கதையும் பற்றி கூற முடியாது என்பதால் திரையரங்கில் சென்று பாருங்கள்.

துருவங்கள் பதினாறு அறிமுக இயக்குனர் படம் என்றால் நிச்சயம் யாரும் நம்பமாட்டார்கள். பொதுவாக அறிமுக இயக்குனர்கள் முதல் படத்திலேயே எக்ஸ்பெரிமெண்ட் படம் எடுக்க முன் வரமாட்டார்கள். தைரியமாக இந்த முயற்சி எடுத்து வெற்றி பெற்ற கார்த்திக் நரேனுக்கு வாழ்த்துகள். 

மேலும் படத்தின் பின்னணி இசை பட்டைய கிளப்பியிருக்கிறார் பிஜாய். படத்துல பாட்டு இல்ல அதனால திரைக்கதையில் தொய்வு இல்லை. காதை கிழிக்கும் டமார் டுமீர் சத்தங்கள் இல்லை. ஆனாலும் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது பின்னணி இசை.

ஒளிப்பதிவு சுஜித் இரவு காட்சிகளில் கட்சிதமான லைட்டிங்கை பொறுத்தி காட்சிகளை தெளிவாக காட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் படம் பார்க்க வரும் ஒவ்வொருவரின் மூளைக்கும் வேலை கொடுத்து சிந்திக்க வைத்த வெற்றி படமாக மாறியிருக்கிறது துருவங்கள பதினாறு

Tamil News Update

Find us on Facebook