பலே வெள்ளையத் தேவா திரைவிமர்சனம்

Posted Date : 27-Dec-2016
நல்லா போயிட்டிருக்குற தனது சினிமா வாழ்க்கையில் தனக்குதானே சூனியம் வச்சிகிறதுன்னு சொல்லுவாங்க அது சசிகுமாருக்கு இந்த படம் மூலம் நிறைவேறியிருக்கு. பலே வெள்ளையத் தேவா என்று தலைப்பு வச்சிட்டு படத்துல இவரு பலேன்னு சொல்ற அளவுக்கு ஒரு காரியமும் செய்யாததுதான் வருத்தமே. சரி நமக்கு எதுக்கு தேவையில்லாத பேச்சு. விமர்சனத்துக்கு போவோம்...

பொதுவா ஒரு வில்லன் என்றால் ஹிரோவுடன் ஏதாவது ஒரு காரணத்திற்காக எதிர்த்து நின்று சண்டையிடுவான். ஆனால் இந்த படத்துல வில்லனின் கோவத்திற்கு ஒரு காரணம் சொல்றாங்கய்யா... அதை பார்த்ததுமே மூக்குல, வாயில ரத்தம் வராத குறைதான். ஏண்டா ஒரு குடைக்கு இப்படி ஒரு அலப்பறையா கொடுப்பா...

சசிக்குமாரின் அம்மா ரோஹினிக்கு டிரான்ஸ்பர் கிடைத்து வில்லன் ஊருக்கு வருகிறார். தான் நடத்தும் கேபிள் சேனல்களை மட்டுமே அந்த ஊரில் பயன்படுத்த வேண்டுமென அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைக்கிறார். அந்த ஊருக்கு புதிதாக வரும் சசிக்குமார் குடும்பம் டிஷ் குடையை வீட்டின் மாடியில் வைக்கிறார். இதனை கண்ட வில்லன் சசிக்குமாரின் அம்மாவை அழைத்து தாருமாறாக ஏசி விடுகிறார்கள். இதற்கு அந்த ஊர் பிரசிடண்டும் உடந்தையாக இருக்கிறார்.

நம்மல எவ்ளோ திட்டினாலும் பரவாயில்லைன்னு பேசாம வீட்டுக்கு வந்துவிடுகிறார் ரோஹினி. ஆனா அதே வீட்டுக்கு மேல மாட்டியிருந்த குடைய காணோம்னு தெரிஞ்சதும் மகனை கூட்டிட்டு வந்து வில்லன் கோஷ்டியை பொளந்து கட்டுகிறார். முதல் பாதியின் முடிவில் சசிக்குமார் வில்லனிடம் இனிமே என் ஆட்டத்தை நீ பார்க்கப்போற என்று சவால் விட்டு செல்கிறார். இரண்டாம் பாதியில் அப்படி ஒரு ஆட்டமே வரலைங்குறதுதான் வருத்தமான விஷயமே. ஹிரோயிசன் நெவர் சீன்ன்ன்ன்ன்....

செல்பி - காத்தாயியாக செல்பி மோகத்தில் திரியும் கோவை சரளா, அல்ட்ரா மார்டன் பாட்டியாகவும், சில சீன்களில் பிள்ளை இல்லா சோகம் நிரம்பிய தாயாகவும் நம்மை கலங்க வைத்துவிடுகிறார்.

சசிக்குமார் பற்றி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல அதே தாடி வச்ச முகம், உண்மையான காதல் என்றால் கண்டிப்பாக உயிரை கொடுத்தாவது சேர்த்து வைப்பேன்னு சொல்ற வசனம். அலுத்து போச்சு பாஸ்ஸ்ஸு... இன்னும் எத்தனை வருஷத்துக்குதான் இதே வண்டியை ஓட்டிட்டு இருப்பீங்கன்னு தெரியல.

இசை தர்புகா சிவா, கிடாரியில் மிச்சமிருந்ததை இங்கே கொட்டி தீர்த்திருக்கிறார் போல. 

இயக்குனர் பி.சோலை பிரகாஷ் முதல் பட வாய்ப்பு சிரிப்பு காட்டி வெற்றி கொடியை நாட்டிடலாம்னு நினைச்சு சசி மண்டியில் நல்லா மிளகாய் அறைத்திருக்கிறார் என்பது புரிகிறது. திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யமில்ல, காமெடி எங்கடான்னு கேட்குறளவுக்கு மொக்கையான காமெடிகள்.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...

மொத்தத்தில் இந்த பலே வெள்ளையத் தேவா - ரொம்ப தொல்லையத் தேவனாக மாறியிருக்கிறான்...

Find us on Facebook