அந்த ஹிரோ கூட நடிக்காதீங்க; கதறும் நடிகையின் ரசிகர்கள்

Posted Date : 27-Oct-2016
அய்யய்யோ... பாத்து சூதானமா இருந்துக்கமா... என்று நடிகையை எச்சரித்துள்ளனர் மக்கள். ஏன் எதற்கு?

மலையாள படமான பிரேமம் படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழில் விஜய்சேதுபதியின் காதலும் கடந்து போகும் படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் பல படங்களின் வாய்ப்புகள் வந்தும் எதையும் ஒத்துக் கொள்ளாமல் காத்துக் கொண்டிருந்தவருக்கு மீண்டும் விஜய் சேதுபதியின் ஹீரோயினாக நடிக்கும் சான்ஸ் கிடைத்தது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கு அந்த படத்திற்கு கவண் என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது தனுஷ் இயக்கும் ”பவர் பாண்டி” படத்தில் ராஜ்கிரணின் இளவயது போர்ஷனில் தனுஷ் நடிக்க உள்ளாரே அவருக்கு ஜோடியாகதான் மடோனா நடிக்கப்போகிறார்.

இப்படி ஒரு ஹேப்பி மொமண்டை சந்தோஷமாக ட்விட்டரில் பகிர்ந்து கொண்டவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வந்திருக்கும்போல, மடோனாவின் ரசிகர்கள் அவருக்கு ட்விட்டரில் பதில் ட்வீட் போட்டுள்ளார்கள். “பார்த்து சூதானமா இரும்மா மொரட்டுப்பயல் வேலைய காட்டிடுவான், வில்லங்கமான ஆளு நெருங்க விடாதம்மா” என்று தனுஷை டேமேஜ் செய்து டம்மி பீஸ் ஆகிவிட்டார்கள் மடோனா ரசிகர்கள்.

Find us on Facebook