ஐஸ்வர்யா ராய் அழகின் ரகசியம் இதுதான்… நடிகை ரேகா விளக்கம்

Posted Date : 17-Oct-2016

பிலிம்பேர் ஸ்டைல் அன்ட் கிளாமர் விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் , ரேகா, ஆலியா பட், சுஷாந்த் சிங் ராஜ்புட், கத்ரீனா கைஃப் என பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துக்கொண்ட நடிகை ரேகா , ஐஸ்வர்யா ராய் அழகு என்பது உலகமே அறியும், அதனால் தான் அவருக்கு உலக அழகி பட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரின் அழகுக்கு என்ன காரணம் என நான் அறிவேன் என தெரிவித்தார்.

அதற்கு ஐஸ்வர்யாவின் தாய் கர்ப்பமாக இருந்தபோது என்னுடைய போட்டோவை அடிக்கடி பார்த்து வந்துள்ளார். இது தான் ஐஸ்வர்யா இவ்வளவு அழகாக இருக்க காரணம் என கேலியாக பேசினார்.

Tamil News Update

Find us on Facebook